Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
செய்திகள் Archives - Page 2 of 3 - www.aravakurichi.com
Thursday , July 9 2020
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

அரவை யூத் 87 மாணவ மாணவியர்

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1987 ம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர்கள் ஒன்றாக இணைந்து பல நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர். அரவை யூத் 87 மாணவ மாணவியர் தற்போது கொரானா வைரஸ் பரவலிலிருந்து தடுக்க அரவக்குறிச்சி பேரூராட்சி எல்லைக்குள் தீவிர பணியாற்றும் பசுமை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்தினர்.

Read More »

தீயணைப்புத் துறை வீரவணக்க நாள்

அரவக்குறிச்சி, 2020 ஏப். 14: தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளை முன்னிட்டு அரவக்குறிச்சி நிலைய அலுவலர் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி தீயணைப்புத் துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வு ஏன் ஏப்ரல் 14 ல் கடைபிடிக்கப்படுகிறது? அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். 1944 ஏப்ரல் 14-ல் ஆயிரத்து இருநூறு …

Read More »

பள்ளபட்டியில் கொரானா பரவல் தடுப்பு பணியில் தன்னார்வளர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளபட்டியில் கொரானா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடும் மக்கள் கூட்டத்தில் சமூக இடைவெளியை பராமரிக்கும் பணியில் கிங் ஆப் பள்ளபட்டி குரூப் நன்பர்கள் களமிறங்கியுள்ளனர். பள்ளபட்டியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் டோக்கன்களை பெறுவதற்கு கூடிய கூட்டத்தை நல்ல முறையில் கட்டுப்படுத்தி போதிய சமூக இடைவெளிவிட்டு எவ்விதமான இடையூறும் இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் பயன்பெற ஏற்பாடுகள் செய்திருந்தது …

Read More »

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

*கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்* கரூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜமாத்தார்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தற்போது மருத்துவமணையில் …

Read More »

பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10)

2 ஏப்ரல் 2020 – பள்ளபட்டி மண்ணில் மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். அதிலும் படைப்பினங்கள் அனைத்திற்கும் நள்ளுதவி செய்திடும் மனத்துடன் பிறப்பதற்கு பெருந்தவம் புரிந்திட வேண்டும்.  இந்த வார்த்தைகளுக்கு முழு அர்த்தத்தை கொடுக்கும் சிலரை அறிமுகம் செய்வதுவே இந்த பதிவின் நோக்கம். எல்லாமும் இயல்பாய் இருக்கும் காலத்தில் யாரும் எதுவும் செய்ய முடியும். ஆனால் இயற்கை பேரிடர் காலத்தில் உயிரை துட்சமென மதித்து மக்களுக்காக களமிறங்குவது என்பது …

Read More »

பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பள்ளபட்டி 01.04.2020 கொரானா வைரஸ் பரவுதலை தடுக்க இன்று காலை முதல் பள்ளபட்டி நகருக்குள் செல்வதும், நகரிலிருந்து வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள்  கடுமையாக்கப் பட்டுள்ளது. அதே போல நகரின் சில பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளர். பள்ளபட்டிக்குள் நுழைவு வாயிலாகத் திகழும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கட்டும் நாளை 2.4.20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேரூராட்சி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

பள்ளபட்டி பேரூராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷா ஸ்கூல் பள்ளி முன்புற மைதானத்தில் நடைபெற்ற தினசரி காய்கறி சந்தை 02-04-2020 நாளை வியாழன் முதல், மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்ற விபரம் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் மளிகை, காய்கறி பொருட்களை போதிய இடைவெளிவிட்டு முன்னெச்சரிக்கையுடன் சென்று பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு பேரூராட்சி நிர்வாகம். பள்ளபட்டி

Read More »

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல்

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல் மிகவும் துயரமானது. இதனை வண்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு மனதளவில் காயப்படுத்தும் பணியினால் சமூக ஆர்வளர்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது. அன்பிற்கினிய கோழைகளே… நீங்கள் அடிக்கும் அடியில் வீழ்ந்துவிட இவர்கள் கோழைகள் அல்ல. அடிக்க அடிக்க அசுர பலத்துடன் இன்னும் மேல் எழுவார்கள். களப்பணியாளர்களே…. கலங்காது களமாடுங்கள். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது …

Read More »