Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215

Notice: Undefined index: 00 in /home/aravakurichi/public_html/wp-includes/class-wp-locale.php on line 312
0 - www.aravakurichi.com
Monday , July 13 2020
Home / 2020

Yearly Archives: 2020

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறை, வருவாய் துறை, அரவக்குறிச்சி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். 144 தடையுத்தரவு அமுலில் இருக்கின்ற காரணத்தால் அதற்குண்டான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஜமாத்தார்களுக்கு உள்ள குறைகள் கேட்டறியப்பட்டது.

Read More »

அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள்

அரவக்குறிச்சி கொங்கு நற்பணி மன்றம், அரவக்குறிச்சி அரிமா சங்கம் இணைந்து பொது மக்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முக கவசம், கையுறைகள், மற்றும் ஐந்து நாட்களுககு உண்டான உணவு தேநீர் ஆகியவற்றை இன்று காலை AVM கார்னரில் அரவக்குறிச்சி அரிமா சங்க தலைவர் சதீஸ் தலைமையில் வழங்கப்பட்டது. அரிமா சங்க பொறுப்பாளர்கள் சேது சுப்பிரமணி, திருமூர்த்தி, செந்தில் குமார், சண்முகம், முருகேசன், பிச்சைமுத்து, சீரப்பன், பெரியசாமி, ராஜகோபால், கார்த்திகேயன், ஆகியுார் …

Read More »

அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

கொரானா நோய் தடுப்புப் பணிகளில் மிகவும் முன் மாதிரியாகத் திகழும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று அரவக்குறிச்சி காயாலா பாவா திடலுக்கு வருகை புரிந்தார்கள். உடன் சித்த மருத்துவத் துறை மருத்துவர்கள் வருகை புரிந்தனர். கொரானா வைரஸ் கிருமி பரவுதலை தடுப்பதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக கபசுரக் குடிநீர் அனைவரும் பருக வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஆதரவாக கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கு …

Read More »

22.4.2020 மௌத் அறிவிப்பு பள்ளபட்டி

தர்மபுரி வகையறா, மர்ஹூம் ஹாஜி முகம்மது யாசீன் அவர்களின் மனைவி சித்தீக் நிஸா அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் தர்மபுரியில் வஃபாத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி) அடக்கம் : தர்மபுரியில் பின்னர் அறிவிக்கப்படும் தகவல் : மருமகன் காமாகட்டி K.A.அபுதாஹீர் தொடர்பு எண் : 9488127862

Read More »

வானம்பாடி பறக்கிறது

கொரானா வைரஸ் பல புதிய தன்னார்வளர்களை களத்தில் இறக்கியுள்ளதைப் போலவே ஏற்கனவே சேவை செய்வதில் தடம் பதித்து செல்பவர்களும் தற்போது களமிறங்கியுள்ளனர். வானம்பாடி இயற்கை சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர்.வெள்ளோடுவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இவர்கள் கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இயற்கை விவசாய ஊக்குவிப்பிற்கும், மண் வளம், மலை வளம், மழை வளம் காப்பதற்கும் பல களப்பணிகள் ஆற்றியுள்ளனர். குறிப்பாக …

Read More »

தாவூதம்மாள் இறப்பு

19.04.2020 ஞாயிறு கறிக்கடை மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும் அஸ்கர் அலி அவர்களின் மனைவியுமான தாவூதம்மாள் அவர்கள் அரவக்குறிச்சியில் தற்போது காலமாகிவிட்டார். அடக்கம் நாளை 20.04.2020 காலை 7 மணிக்கு தொடர்புக்கு மஹபூப் அலி 9952795141

Read More »

தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 274/16.4.20

செய்தி வெளியீடு எண்: 274 நாள்: 16.04.2020 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு அரசு வழங்கும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவைப்படும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு 2001 ஆம் ஆண்டு …

Read More »

சபுரா பேகம் (எ) பாப்பாத்தியம்மாள் இறப்பு

*மௌத் அறிவிப்பு* அரவக்குறிச்சி ஜமாத் 18/4/2020 சனிக்கிழமை அரவக்குறிச்சி மர்ஹூம்V.அப்துல்ரஜாக் அவர்களின் மனைவியும் வாங்கல் கரீம் ராவுத்தர் அவர்களின் மகளும் சையது இப்ராஹீம், ஹாஜா ஜாபர் அலி, கலீல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், சகிலா பானு, அசன்பானு ஆகியோரின் தாயாருமான *சபுரா பேகம் (எ) பாப்பாத்தியம்மாள்* கோவையில் மௌத்தாகிவிட்டார். (இன்னாலில்லாஹி) அடக்கம் கோவையில் தொடர்புக்கு 7904124744

Read More »

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை நோன்பு பிடிக்க தடை – தமிழ்நாடு வக்பு வாரியம்

மத்திய வக்பு கழக அறிவிப்பை பின்பற்றி இந்தியா முழுவதும் பரவிவரும் கொரோனா நோய் வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக மாண்புமிகு பாரதப்பிரதமரின் ஆணையின்படி நாடு முழுவதும் ஊரடங்கு 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்நது ஏற்கனவே அறிவுறுத்தியவாரு அனைத்து வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டு அவரவர் இல்லங்களிலேயே வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் தர்காக்கள் இமாம்பாராக்கள் …

Read More »