Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10) - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10)

பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10)

2 ஏப்ரல் 2020 – பள்ளபட்டி

மண்ணில் மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். அதிலும் படைப்பினங்கள் அனைத்திற்கும் நள்ளுதவி செய்திடும் மனத்துடன் பிறப்பதற்கு பெருந்தவம் புரிந்திட வேண்டும்.  இந்த வார்த்தைகளுக்கு முழு அர்த்தத்தை கொடுக்கும் சிலரை அறிமுகம் செய்வதுவே இந்த பதிவின் நோக்கம்.

எல்லாமும் இயல்பாய் இருக்கும் காலத்தில் யாரும் எதுவும் செய்ய முடியும்.

ஆனால் இயற்கை பேரிடர் காலத்தில் உயிரை துட்சமென மதித்து மக்களுக்காக களமிறங்குவது என்பது அனைவரும் செய்யத் துணியும் காரியமல்ல.

களப்பணியில் முதல் பலி நாமாகவும் இருக்கலாம் என்று தெரிந்தே மக்களுக்காக சேவை செய்ய களமிறங்குபவர்களை இங்கு அடையாளப் படுத்துகின்றோம்.

பள்ளபட்டி – கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து ஆகும். சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊர்.

இங்கு உள்ளோரில் பெரும்பான்மையினர் வியாபாரிகள். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பரந்து விரிந்து வணிகம் செய்து வாழ்பவர்கள்.

இங்கு இளைஞர்களை காண்பது அரிது. ஏனெனில் அவர்கள் பணி காரணமாக ஏதேனும் ஒரு ஊரில் ஏதேனும் ஒரு தொழில் செய்து கொண்டிருப்பர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி மன்சூர்அலி என்பவர் 10 நண்பர்களை வைத்து ஒரு குழுவை உருவாக்கினார். அதில் உள்ள 10 நபர்களை குறிக்கும் விதமாக டாப் டென் என்று குழுவுக்கு பெயரும் சூட்டினர்.இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை பல  சேவைகளை செய்து வருகின்றனர். தற்போது இந்த அமைப்பில் 45 நபர்கள் உள்ளனர்.

கோடை காலத்தில் நீர் மோர் வழங்குதல்

கஜா புயல் நிவாரணப் பணிகள்

கேரள வெள்ள நிவாரணப் பணிகள்

இரத்த தானப் பணிகள்

தற்போது கொரானா வைரஸ் பரவல் தடுக்கும் பணிகள் என இவர்களின் பணிகள் விரிவடைந்து கொண்டே உள்ளது.

காய்த்த மரத்தில் கல்லடி படும் என்பது போல இரு நாட்களுக்கு முன்பு இவர்களின் பெயர் பட்டியலைப் போட்டு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு வதந்தியை இவர்களின் சேவைகளைப்  பிடிக்காதவர்கள் பரப்பிவிட அது மிகப் பெரும் வைரலாக பரவியது.

இந்த செயலினால் களப்பணியாளர்களும், அவர்கள் குடும்பத்தினர்களும் மிகவும் மனம் வருந்தினாலும் இவர்களின் களப்பணிக்கு குறுக்கே நிற்காமல் இவர்களை மேலும் ஊக்கப் படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

தற்போது அரசுடன் இணைந்து களத்தில் 1. மன்சூர் அலி, 2. செயது அபுதாஹிர், 3.ஜாபர் சாதிக், 4.சையது அபுதாஹிர், 5.முஹம்மது இக்பால், 6. கார்த்திகேயன்
7., ஆஜார் தீன், 8. முஹம்மத் ஷேக் இமாம், 9.கமாலுதீன்
10.தாரிக், 11.S.T.அபுதாஹிர், 12. அன்வர் பாட்சா, 13.யாசர் அரபாத், 14.யாசர் அரபாத் உள்ளிட்டவர்கள் களமாடி வருகின்றனர்.

இவர்கள் உள்ளிட்ட அனைத்து டாப்டென் குரூப் (Top Ten Groups) இளைஞர்களும் தொடர்ந்து  பல சேவைகள் புரிய வேண்டும் என அரவக்குறிச்சிடாட் காம் (www.aravakurichi.com)வெப் சைட் மூலம் வாழ்த்துகின்றோம்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *