Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
தீயணைப்புத் துறை வீரவணக்க நாள் - www.aravakurichi.com
Thursday , July 9 2020
Home / செய்திகள் / தீயணைப்புத் துறை வீரவணக்க நாள்

தீயணைப்புத் துறை வீரவணக்க நாள்

அரவக்குறிச்சி, 2020 ஏப். 14: தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளை முன்னிட்டு அரவக்குறிச்சி நிலைய அலுவலர் அஞ்சலி செலுத்தினார்.

நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி தீயணைப்புத் துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வு ஏன் ஏப்ரல் 14 ல் கடைபிடிக்கப்படுகிறது?

அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். 1944 ஏப்ரல் 14-ல் ஆயிரத்து இருநூறு டன் வெடிப்பொருட்கள், எண்ணெய் ட்ரம்களை சுமந்தபடி மும்பை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்தக் கப்பல் மட்டுமின்றி, அருகிலிருந்த வேறு கப்பல்களும், கட்டிடங்களும் தீக்கிரையானது. அதில் மும்பை துறைமுகத்தைச் சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 பேர் பலியானார்கள். இந்த துயர நிகழ்வின் நினைவாகத்தான், வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஏப்ரல் 14ல் வீர அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று உயிரிழந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள தூணிற்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக அரவக்குறிச்சி நிலைய அலுவலர் பிரபாகரன் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னனி தீயணைப்போர் ராதா கிருஷ்ணன், ரங்கராஜன், ஸ்ரீரங்கன், செல்வம், தீயணைப்போர்கள் விக்னேஸ்வரன், வினோத்குமார், ஜெயவீரகுமரேசன், மதன்குமார், பிரபாகரன், ராஜா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *