Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
கொரானா - இனி நாம் என்ன செய்ய வேண்டும்? - www.aravakurichi.com
Friday , October 30 2020
Home / செய்திகள் / கொரானா – இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரானா – இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

அன்பிற்கினிய சொந்தங்களுக்கு…

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களனைவருக்கும் உண்டாவதாக.

இந்திய சரித்திரத்திலேயே இது போன்றதொரு நெருக்கடி நிலை இதுவரை இல்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போதைய கொரானவின் சூழல் காட்சியளிக்கின்றது.

கொரானாவின் தாக்கம் நமதூரையும் விட்டு வைக்கவில்லை.

நமதூரைச் சாரந்த பலருக்கு கொரானா பாசிட்டிவ் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நமதூருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரானா பாசிட்டிவ் இனம் காணப்பட்டவர்களின் ரத்த தொடர்புடையவர்களுக்கு முதலில் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது அவர்களோடு தொடர்பிலிருந்த மற்றவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நமதூரில் பாசிட்டிவ் தொற்று யாருக்கெல்லாம் இருந்ததோ அவர்களை யாரெல்லாம் சென்று சந்தித்தார்களோ. பழகினார்களோ அவர்கள் தாமாகவே முன்வந்து தங்களை சுய பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதன் மூலம் கொரானா பாதிக்கப் பட்டிருந்தால் அதற்கு உடனடியாக உரிய உயர் சிகிச்சை பெறலாம். அதைவிட மேலாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

மற்றவர் என்ற வார்த்தையின் பின்னணியில்உங்களின் தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

பாசிட்டிவ் நோயாளிகளோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப்பற்றி தெரிவித்தால் உடனுக்குடன் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதா என அறியலாம்.

எனவே அன்பிற்கினியவர்களே உங்களையும், உங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும் கொரானாவின் பிடியிலிருந்து காக்க முன்வாருங்கள்.

அனைவரும் சமூக இடைவெளியினை கடைபிடியுங்கள். குடும்ப தேவைகளை திட்டமிட்டு ஒரே முறையில் ஒருவர் மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வாருங்கள்.

எப்போது வெளியே சென்று வந்தாலும் கைகளை அவசியம் சோப்பு போட்டு கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்லுங்கள்

இருமல், தும்மல், சளி, தொண்டைவலி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார அலுவலரிடம் தெரிவியுங்கள்.

 

முன்னெச்சரிக்கையாக இருப்போம். கொரானா பாதிப்பிலிருந்து நம்மையும், நாட்டையும், வீட்டையும் காப்போம்.

அன்புடன்
கொரானா ஒழிப்பு தன்னார்வலர்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *