Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை நோன்பு பிடிக்க தடை - தமிழ்நாடு வக்பு வாரியம் - www.aravakurichi.com
Wednesday , August 5 2020
Home / செய்திகள் / ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை நோன்பு பிடிக்க தடை – தமிழ்நாடு வக்பு வாரியம்

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை நோன்பு பிடிக்க தடை – தமிழ்நாடு வக்பு வாரியம்

மத்திய வக்பு கழக அறிவிப்பை பின்பற்றி

இந்தியா முழுவதும் பரவிவரும் கொரோனா நோய் வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக மாண்புமிகு பாரதப்பிரதமரின் ஆணையின்படி நாடு முழுவதும் ஊரடங்கு 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்நது ஏற்கனவே அறிவுறுத்தியவாரு அனைத்து வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டு அவரவர் இல்லங்களிலேயே வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் தர்காக்கள் இமாம்பாராக்கள் தொழுகை மஜ்லிஸ் மற்றும் நோன்பு திறக்க கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து வக்பு நிர்வாகத்தினரும் மத்திய வக்பு கழக அறிவுறுத்தலுக்கிணங்க கொருானே வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக எதிர்வரும் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் தர்காக்கள் இமாம்பாராக்கள் ஈத்காக்களில் தொழுகை மஜ்லிஸ் மற்றும் நோன்பு திறக்க கூடுவதை தவிர்க்க மத்திய வக்பு கழகம் தடை செய்துள்ளதை தவறாமல் கடைபிடிக்க உத்தரவிடப்படுகிறது.

மேற்கூறிய அறிவுரையினை பின்பற்ற தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வக்பு நிர்வாகிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியம்

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *