Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 274/16.4.20 - www.aravakurichi.com
Thursday , July 9 2020
Home / செய்திகள் / தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 274/16.4.20

தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 274/16.4.20

செய்தி வெளியீடு எண்: 274 நாள்: 16.04.2020

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு அரசு வழங்கும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு
அரசு, இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவைப்படும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 2019-இல் 2,895 பள்ளிவாசல்களுக்கு 5,450 மெட்ரிக் டன் விலையில்லா பச்சரிசி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள்
மே 3ந் தேதி வரை பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள
நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவது தடை
விதிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து சமயரீதியான விழாக்களுக்கும்
தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா தொற்றுநோய் பரவும்
வீரியத்தை கருத்தில் கொண்டும், இந்த நோடீநு உயிருக்கு பேராபத்தை
விளைவிக்கும் மோசமான நோய் என்பதை கருத்தில் கொண்டும், சமூக
விலகல் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இந்த தருணத்தில் வரும் ஏப்ரல் 23/24 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், அனைத்து வக்ஃப் நிர்வாகத்தினரும் மத்திய வக்ஃப்
கழகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க கொரோனா வைரஸ் பரவுவதை
தடுக்கும் விதமாக எதிர்வரும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள்
பள்ளிவாசல்கள் / தர்காக்கள் /இமாம்பாரா /ஈத்காக்களில் தொழுகை / மஜ்லிஸ் மற்றும் நோன்பு திறக்க கூடுவதை தவிர்க்க மத்திய வக்ஃப் கழகம் தடை செய்துள்ளதை தவறாமல் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியமும் எதிர்வரும் புனித இரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் / தர்காக்கள் / இமாம்பாராக்களில் தொழுகை / மஜ்லிஸ் மற்றும் நோன்பு திறக்க கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் 5450 மெட்ரிக் டன் பச்சை அரிசியை, ஏழைகளுக்கு
புனித இரமலான் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க பள்ளி வாசல் /
தர்காக்களுக்கு அரசு வழங்கி வரும் நிலையில் தற்போது கொரோனா
தொற்றுநோய் தீவிரமாக, பரவுவதை தடுக்க இந்த ஆண்டு ஊரடங்கு அமுலில் உள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிவாசல்களில் புனித இரமலான் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவதை தவிர்ப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

பள்ளிவாசல்களுக்கு சென்ற ஆண்டை போலவே 19ஆம் தேதிக்குள்
வழங்கப்படும் பச்சை அரிசியை தகுதியான குடும்பங்களுக்கு ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகிகளும் பிரித்து குடும்பந்தோறும், தன்னார்வலர்களின் உதவியுடன் வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து முடிவு செய்ய பல்வேறு தரப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து அவர்களது கருத்துக்கள் பெறப்பட்டது.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் புனித இரமலான் மாத
நோன்புக்கு கஞ்சி தயாரிக்க அரசு வழங்கும் 5450 டன் அரிசியை,
2895 பள்ளிவாசல்களுக்கும் 19ஆம் தேதிக்குள் அரசால் வழங்கப்படும்.
தற்போது நிலவி வரும் அசாதாரண சூடிநநிலையை கருத்தில் கொண்டு இந்த அரிசியை பள்ளி வாசல் நிர்வாகிகளால், தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன் வீடுகள் தோறும் சென்று 22ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகமும் இதற்கு உதவ அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் புனித ரமலான் காலத்தில் மற்றவர்கள் தானமாக வழங்கும் பொருட்களையும் இதே வழிமுறையை பின்பற்றி வீடு, வீடாக தன்னார்வ தொண்டர்கள் மூலமாக இஸ்லாமிய பெருமக்களுக்கு வழங்குவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நோய் தொற்று பரவுவதை தடுக்க இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவது தடைசெடீநுயப்பட்டுள்ளது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு.ஜே.கே.திரிபாதி, இ.கா.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், உணவுத் துறை திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்போட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., தலைமை காஜி ஜனாப்.சலாவுதீன் முகம்மது அயூப் (சன்னி பிரிவு, தலைமை காஜி, ஜனாப் குலாம் முகம்மது மெக்தி (ஷியா பிரிவு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செடீநுதி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *