Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
வானம்பாடி பறக்கிறது - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / ஈசநத்தம் / வானம்பாடி பறக்கிறது

வானம்பாடி பறக்கிறது


கொரானா வைரஸ் பல புதிய தன்னார்வளர்களை களத்தில் இறக்கியுள்ளதைப் போலவே ஏற்கனவே சேவை செய்வதில் தடம் பதித்து செல்பவர்களும் தற்போது களமிறங்கியுள்ளனர்.

வானம்பாடி இயற்கை சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர்.வெள்ளோடுவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இவர்கள் கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இயற்கை விவசாய ஊக்குவிப்பிற்கும், மண் வளம், மலை வளம், மழை வளம் காப்பதற்கும் பல களப்பணிகள் ஆற்றியுள்ளனர். குறிப்பாக ஆண்டுக்கொருமுறை இவர்கள் நடத்தும் கருத்தரங்கு இப்பகுதிகளில் மிகவும் பிரசித்தம்.

தலைசிறந்த துறைசார் விவசாய அறிஞர்களையும், தன்னார்வளர்களையும் ஊருக்கு அழைத்துவந்து தாம் சார்ந்த மக்களுக்கு அறிவை விரிவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் பல துறைகளில் பல ஊர்களில் செயல்படுபவர்கள்.

இந்த வானம்பாடி இளைஞர்கள் இந்த கொரானா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக தங்கள் இறக்கைகளை விரித்து பறந்து பறந்து மக்களுக்கு விழிப்புணர்வையும், பாதுகாப்பு கவசங்களையும் (sanitizer,handwash,gloves,mask) வழங்கி வருகின்றனர்.

சுகாதார காவலர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மின்துறை பணியாளர்கள், பஞ்சாயத்து பணியாளர்கள், விவசாய அதிகாரிகள் என இப்பகுதி மக்களை பாதுகாக்கும் அனைத்து தீரர்களுக்கும் இச்சேவையை செய்து சிறப்பித்து வருகின்றனர்.

வாழ்வது ஒரு முறை. அதிலென்ன வரையரை. அன்பாய் வாழ்வோம். அனைவருக்குமாய் வாழ்வோம். அரவணைத்து வாழ்வோம் என்ற வழியில் பயணிக்கும் இந்த இளைஞர்களை அரவக்குறிச்சி.காம் வலைத்தளம் வாழ்த்துகிறது.

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *